பிரித்தானியாவில் குழந்தைகளின் மைதானத்தில் இருந்து நூற்றுக்கணக்கான வெடிபொருட்கள் மீட்பு!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/uk-6.jpg)
இரண்டாம் உலக போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் பிரித்தானியாவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஒரு குழந்தைகள் விளையாட்டு மைதானத்தின் அடியில் 160இற்கும் மேற்பட்ட வெடிக்காத பயிற்சி குண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் நாளிலேயே, வெடிக்காத 65 பயிற்சி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக வூலர் பாரிஷ் கவுன்சிலின் அறிக்கை தெரிவிக்கிறது.
குறித்த பகுதியில் இருந்து வெடிபொருட்கள் அகற்றப்படும் வரை விளையாட்டு மைதான விரிவாக்கம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 3 times, 3 visits today)