இலங்கையில் ஜீவகாருண்ய முறையில் பன்றிகளை கொல்ல அனுமதி
வைரஸ் நோயினால் பாதிக்கப்ப ட்டுள்ள பன்றிகளை ஜீவகாருண்ய முறையில் கொலை செய்வதற்கு அரசாங்கத்தின் அவதானம் திரும்பி உள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன
ஆபிரிக்க வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பன்றிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் இத்தீர்மானந்தை மேற்கொண்டு உள்ளதாக தெரிய வருகிறது.
பாரிய அதிர்வை அதிர்ச்சியை ஏற்படுத்தாத வகையில் ஒரே முறையில் தலையில் சுட்டு கொலை செய்ய இம்முறையில் அனுமதி வழங்கப்படவுள்ளது.
இத்தீர்மானத்தின் பிரகாரம் உரிய அறிவுறுத்தல்கள் எதிர்வரும் தினங்களில் பன்றி பண்ணைகளுக்கு வழங்கப்படவுள்ளன.
உண்ணிகள் மூலமாகவும் பன்றி வைரஸ் நோய் பரவலாம் என சந்தேகிக்கப் படுவதால் பன்றி பண்ணைகளின் உயிர்காப்பு நடவடிக்கையாக அவதானமான திராவகங்கள் நெருங்குவதை தவிர்க்கவும், ஒதுக்கப்படும் உணவு எச்சில்களை வழங்குவதைத் தவிர்க்கவும் மேற்படி அறிவுறுத்தல்களில் உள்ளடக்கப்படவுள்ளன.
பன்றி நோய் பரவலை தவிர்க்க பண்ணைகளினுள் நுழையும் மனிதர்கள் வாகனங்களை தொற்று தடுப்புக்கு உட்படுத்தவும், நோய்வாய்ப்பட்ட பன்றிகளை கருணைக் கொலை செய்யப்பட்ட பின் முற்றாக எரித்தல் அல்லது ஆழமான குழிகளில் புதைக்கப்பட வேண்டும்.
புதைக்கப் பட்ட குழி சுண்ணாம்பு கவசத்தால் மூடப்பட வேண்டும், நோய் தொற்றி இறந்த பன்றிகள் போக்குவரத்து செய்யப்படும் போது முத்திரையிடப்படல் வேண்டும்.
மேலும் அவை எரிக்கப்பட்ட பின் அதன் சாம்பல் பாதுகாப்பாக புதைக்கப்படல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படவுள்ளன.