சிங்கப்பூரில் போலித் திருமணங்களில் பாரிய அதிகரிப்பு – நெருக்கடியில் அதிகாரிகள்

சிங்கப்பூரில் போலித் திருமணங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் கைதானவர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 5 மடங்காகியுள்ளது. 2023ஆம் ஆண்டு 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் புள்ளிவிவரத்தை வெளியிட்டது.
அதிகாரிகள் நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருப்பதால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகியுள்ளதென ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
குற்றச்செயல் கும்பல்களால் ஏற்பாடு செய்யப்படும் போலித் திருமணங்கள் குறித்த விசாரணைகள் அதிகரித்துள்ளது. சில போலித் திருமணங்கள் குறித்துப் பொதுமக்களிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
குடிநுழைவு விதிமுறைகளை மீறியதற்காகக் கடந்த ஆண்டு 536 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்படி விதிமுறைகளை மீறி நாட்டுக்குள் வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, வேலை கொடுத்த குற்றங்களுக்காக 389 பேர் கைது செய்யப்பட்டனர்.