சடலங்கள் குவிந்துள்ளதால் காஸா வைத்தியசாலைகளில் பெரும் நெருக்கடி
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களால் காஸாவில் உள்ள வைத்தியசாலைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
எரிபொருள் விநியோகம் சரிந்ததால் காஸா பகுதியில் உள்ள மருத்துவமனைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் காஸா பகுதியில் இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்தாக்குதல்களினால் வைத்தியசாலைகளுக்குக் கொண்டுவரப்பட்ட காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்களின் எண்ணிக்கை அந்த வைத்தியசாலைகளில் தற்போதுள்ள நிலைமைகளை தாங்கிக் கொள்ள முடியாதுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போதிய மருந்துகள் கையிருப்பில் இல்லாத காரணத்தால் வைத்தியசாலைகளில் நிரம்பி வழியும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் வைத்தியர்கள் கடுமையாக உழைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், காஸாவில் உள்ள வைத்தியசாலைகள், இறந்தவர்களின் உடல்களை மறைப்பதற்கு பயன்படுத்தப்படும் துணிகள் மற்றும் பொருட்கள் முடிவடைவதால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.