பல அம்சங்களுடன் அறிமுகமான Huawei Band 8!
ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் புதிதாக Huawei Band 8 என்ற ஃபிட்னஸ் ட்ராக்கர் பேண்ட்-ஐ சத்தமின்றி அமைதியாக அறிமுகம் செய்துள்ளது. நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட் ஃபிட்னஸ் டிராக்கரை முன்னணி இ-காமர்ஸ் பிளாட்ஃபார்மில் பட்டியலிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வியரபிள் டிவைஸ் 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த டிவைஸ் ஆல்வேஸ்-ஆன்-டிஸ்ப்ளே (AOD) அம்சத்தை சப்போர்ட் செய்கிறது மற்றும் 5 ATM வாட்டர் ரெசிஸ்டென்ஸை கொண்டுள்ளது. மேலும் இது 14 நாட்கள் வரை பேட்டரி லைஃபை வழங்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் பேண்ட் 1.47-இன்ச் ரெக்டேங்குலர் டச்-சப்போர்ட் கொண்ட AMOLED ஸ்கிரீனை கொண்டுள்ளது. மேலும் இது தூக்கம், மன அழுத்தம், பிளட் ஆக்ஸிஜன் லெவல் மற்றும் ஹார்ட் ரேட் டிராக்கர்களை கொண்டுள்ளது.
Huawei Band 8 அம்சங்கள் & ஸ்பெசிஃபிகேஷன்கள்:
ஹுவாய் நிறுவனத்தின் Band 8-ல் ஆனது 194 x 368 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 282ppi பிக்சல் டென்சிட்டி கொண்ட 1.47-இன்ச் ரெக்டேங்குலர் டச்-சப்போர்ட் AMOLED ஸ்கிரீன் உள்ளது. இந்த ஸ்மார்ட் ட்ராக்கர் Android மற்றும் iOS ஸ்மார்ட் ஃபோன்கள் ஆகிய இரண்டிற்கும் இணக்கமானது, மேலும் ப்ளூடூத் 5.0 கனெக்ட்டிவிட்டியை சப்போர்ட் செய்கிறது.
இந்த ஸ்மார்ட் பேண்ட்-ல் ஒரு accelerometer, கைரோஸ்கோப் மற்றும் ஆப்டிகல் ஹார்ட்ரேட் சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டிவைஸ் Huawei-ன் TruSeen 5.0 ஹார்ட் ரேட் மானிட்டரிங் மற்றும் TruSleep 3.0 ஸ்லீப் ட்ராக்கிங் மற்றும் TruRelax ஸ்ட்ரஸ் ட்ராக்கிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை உள்ளடக்கி இருக்கிறது. Huawei Band 8 ஆனது நார்மல் யூசேஜில் சுமார் 14 நாட்கள் பேட்டரி லைஃபை வழங்கும் என்றும், ஹை யூசேஜில் 9 நாட்கள் வரை பேட்டரி லைஃபை வழங்கும் என்றும் நிறுவனம் கூறி உள்ளது.
அதே நேரம் Always-On-Display (AOD) அம்சம் எனேபிள் செய்யப்பட்டிருந்தால், பேட்டரி மூன்று நாட்கள் வரை நீடிக்கும். இந்த ஸ்மார்ட் ட்ராக்கர் ஒரு மேக்னட்டிக் சார்ஜிங் போர்ட்டைக் கொண்டுள்ளது மற்றும் 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டென்ஸ் உடன் வருகிறது. Huawei Band 8-ல் இருக்கும் கூடுதல் அம்சங்களில் மியூசிக் கன்ட்ரோல், ரிமோட் கேமரா கன்ட்ரோல், குயிக் மெசேஜ் ரிப்ளே மற்றும் இன்கம்மிங் கால் அலெர்ட்ஸ் ஆகியவை அடங்கும்.