நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த வழிகள்: குளிர்கால ஆரோக்கியக் குறிப்புகள்.”
குளிர்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து தப்பிக்க, நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை எவ்வாறு வலிமையாக வைத்திருப்பது என்பது குறித்து இந்த ஆய்வுக் கட்டுரை விளக்குகிறது.
விட்டமின் மாத்திரைகளை விட, சத்தான உணவுகள் மூலமே நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவது சிறந்தது. குறிப்பாக விட்டமின்-டி (Vitamin D) மற்றும் நார்ச்சத்து (Fibre) நிறைந்த உணவுகள் அவசியம்.

மேலும் வறண்ட காற்றில் வைரஸ்கள் எளிதாகப் பரவும். எனவே, வீடுகளில் சரியான ஈரப்பதத்தை (Humidity) பராமரிப்பது காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணிநேரத் தூக்கம் அவசியம். குறைவான தூக்கம் உங்களை எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாக்கும். மிதமான உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தை அதிகரித்து நோய் எதிர்ப்பு செல்களை சுறுசுறுப்பாக்கும்.
அதிகப்படியான மன அழுத்தம் உடலின் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். அதேபோல், குளிர்ந்த நீரில் குளிப்பது உடலின் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்ட உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் ‘இம்யூன் பூஸ்டிங்’ (Immune Boosting) என்ற பெயரில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் வேலை செய்வதில்லை. இயற்கையான வாழ்க்கை முறை மாற்றங்களே சிறந்தது.





