இலவசமாக யூடியூப் பிரீமியம் வாங்குவது எப்படி?
இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய தகவல்களை தெரிந்துகொள்ளவும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதில், இருக்கும் பெரிய தலைவலியான விஷயமே நாம் ஆர்வமாக எதாவது பார்த்துக்கொண்டிருந்தோம் என்றால் இடையில் திடீரென எதாவது விளம்பரம் வரும்.
அதனை பார்க்கும்போது அய்யோ நடுவில் இது வேற வருகிறதே என நமக்கு அந்த வீடியோ பார்க்கும் ஆர்வமும் கூட போய்விடும். விளம்பர பிரச்சனை இல்லாமல் வீடியோக்களை பார்க்கவேண்டும் என்றால் அதற்கு தனியாக யூடியூப் பிரீமியம் நாம் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளும் வசதியும் தனியாக உள்ளது. அதில் சிலர் பணம் செலுத்தி யூடியூப் பிரீமியம் பெற்று கொண்டு யூடியூப்பை பயன்படுத்திக்கொண்டு வருகிறார்கள்.
ஆனால், இன்னும் பலருக்கும் தெரியாத விஷயமே பணம் செலுத்தாமல் கூட யூடியூப் பிரீமியம் 2 மாதங்கள் இலவசமாக வாங்கி கொள்ளும் அம்சமும் உள்ளது என்பது தான். அதனை எப்படி வாங்குவது என்பது பற்றி விவரமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலில் நீங்கள் யூடியூப் பிரீமியம் இரண்டு மாதங்கள் இலவசமாக வாங்கிக்கொள்ள விரும்பினீர்கள் என்றால் உங்களுடைய கூகுள் பிளே ஸ்டோருக்கு செல்லுங்கள். அங்கு சென்றபிறகு அதில் நீங்கள் எந்த ஜிமெயிலில் பிரீமியம் வாங்கிக்கொள்ள விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்துவிட்டு அதன்பிறகு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் PLAY POINTS என்பதை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.
க்ளிக் செய்த பிறகு அதில் EARN , USE, PERKS என்று மூன்று அமைப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் நீங்கள் PERKS என்பதை க்ளிக் செய்தவுடன் அதில் 2 மாதம் இலவசமாக யூடியூப் பிரீமியம் வாங்குவதற்கான விளம்பரம் இருக்கும்.
அதனை கிளிக் செய்து 2 மாதங்களுக்கான யூடியூப் பிரீமியம் சலுகையை Redeem செய்து கொள்ளுங்கள். அப்போது நீங்கள் ரூ.149 ரூபாய் செலுத்தவேண்டும் என காட்டும். உடனடியாக அதனை பார்த்துவிட்டு அதிர்ச்சியாகி என்ன? இலவசம் என்று சொல்லிவிட்டு இப்போது பணம் கட்ட சொல்கிறீர்கள் என டென்ஷன் ஆகவேண்டாம். அப்படி பணம் கட்ட சொன்ன பிறகு நீநீங்கள் எந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகமாக உபயோகம் செய்கிறீர்களோ அதன் மூலம் பணத்தை செலித்திவிடுங்கள்.
அதன்பிறகு உங்களுக்கு யூடியூப் பிரீமியம் கிடைத்துவிடும். அதன்பிறகு நீங்கள் கூகுள் பே (Google Pay ) வழியாக அந்த பணத்தை செலுத்தி இருந்தீர்கள் என்றால், கூகுள் பேவிற்குள் சென்று அதில் உங்களுடைய முகப்பை (profile)-ஐ க்ளிக் செய்து அதில் AUTO Pay என்பதை க்ளிக் செய்து அதில் நீங்கள் செலுத்திய பணத்தை cancel autopay என்பதை கிளிக் செய்யுங்கள் உங்களுடைய பணம் உங்கள் வங்கிக்கணக்குக்கு திரும்ப வந்துவிடும்.
முக்கிய குறிப்பு : நீங்கள் ஒரு வேலை AUTO Pay என்பதை நிறுத்தவில்லை என்றால் உங்களுடைய வங்கிக்கணக்கில் இருந்து 149 ரூபாய் குறிப்பிட்ட தேதியில் எடுக்கப்பட்டுவிடும். எனவே, AUTO Pay என்பதை நீங்கள் cancelle செய்து விடுங்கள். அதன்பிறகு புதிதாக நீங்கள் ஒரு மெயிலை உருவாக்கி இருக்கிறீர்கள் என்றாலும் அவர்களுக்கு இந்த சலுகை இருக்காது. பல மாதங்கள் ஜிமெயில் உபயோகம் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை உள்ளது.