மாரடைப்பு வராமல் தடுக்க தினம் எவ்வளவு நேர நடை பயிற்சி தேவை… மருத்துவர் கூறும் தகவல்

நம் உடல் இயங்க வைக்கும் இதயம் தனது துடிப்பதை நிறுத்தினால் நம் வாழ்வு முடிவுக்கு வந்து விடும். எனவே, நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நேரம் ஒதுக்குங்கள். நடைபயிற்சி இதயத்திற்கு சிறந்த உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. இதயத்தை அரோக்கியமாக வைத்திருக்கவும், மாரடைப்பு வராமல் தடுக்கவும், தினமும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும், எந்த வேகத்தில் நடக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
வாரத்திற்கு 200 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சி (Benefits of Brisk Walking) செய்ய வேண்டும் என்று கூறினார். வாரத்தில் 5 நாட்கள் 200 நிமிடங்கள் அதாவது சுமார் 40 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி மேற்கொள்வது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மாரடைப்பு ஆபத்தை பெருமளவு குறைக்கும். இதில் 5 நிமிட வார்ம்அப் மற்றும் 30 நிமிட விறுவிறுப்பான நடை, இறுதியில் 5 நிமிட கூல்டவுன் நேரம் அடங்கும். இவ்வாறு நடப்பது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது எந்த வேகத்தில் நடக்க வேண்டும்?
இதய ஆரோக்கியத்திற்கு விறுவிறுப்பான நடைப்பயிற்சி தேவை. விறுவிறுப்பான நடை என்பது நீங்கள் நடக்கும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்களைப் தொடர்ந்து பேச முடியாத அளவில், வேகமாக நடக்க வேண்டும். அதாவது பேசுவதற்கு சிரமப்படும் வகையில் நடைபயிற்சி ஜாகிங் செய்ய வேண்டும். இந்த நடையின் வேகம் என்பது, வயது, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை பொறுத்து வெவ்வேறு அளவிலான வேகமாக இருக்கலாம்.
ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது இதயத்திற்கு நல்லதா?
ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது இதயத்திற்கு நல்லது என கூற இயலாது. அது, உடல் கட்டமைப்பிற்கு தான் நல்லது. இது இதய ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தாது. உடலுக்கு வலிமை சேர்க்கும் வகையில் எடையை உயர்த்தி, எடை பயிற்சி செய்யும்போது, அது தசைகளை உருவாக்குகிறது, ஆனால் சில நேரங்களில் அளவிற்கு அதிக எடையைப் பயன்படுத்துவது அல்லது அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக திடீரென ஏற்படும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.
இதயத்திற்கு சிறந்த உடற்பயிற்சி எது?
இதயத்திற்கான சிறந்த உடற்பயிற்சி பற்றி கூறுகையில், விறுவிறுப்பான நடைபயிற்சி, படிகளில் ஏறி இறங்குதல், ஏரோபிக்ஸ், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஓட்டம் ஆகியவை நல்ல பயிற்சிகளாக கருதப்படுகின்றன. இது உங்கள் இதயத்தை பலப்படுத்துகிறது. இதயத்திற்கு தினசரி நடைப்பயிற்சி போதும். ஆம், நீங்கள் 40 நிமிடங்களுக்கு மேல் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்தால், அது கூடுதலாக உங்கள் எடை இழப்பு அல்லது கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது.