ரணில் எப்படி ஜனாதிபதியானார் ? : வெளியாகவுள்ள புத்தகம்!
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘அறகலய’ (பாரியளவிலான எதிர்ப்பு)க்குப் பின்னர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியானார் என்பது தொடர்பான மற்றுமொரு புத்தகத்தை விரைவில் வெளியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த புத்தகமானது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதிய புத்தகத்துடன் ஒத்துப்போவதாக கூறப்படுகிறது.
தற்போதைய ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் தனி ஆசனத்துடன் எப்படி இலங்கையின் அரச தலைவராக ஆனார் என்பதை சொல்வதாக அபேவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.





