ஆஸ்திரேலியா – இஸ்ரேல் உறவில் கடும் விரிசல்
ஆஸ்திரேலியா, சிட்னி போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தது.
ஆஸ்திரேலிய பிரதமர்மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கு ஆஸ்திரேலியா எடுத்த தீர்மானத்தின் பிரதிபலன் இது என இஸ்ரேல் குற்றஞ்சாட்டி இருந்தது.
அதேவேளை, ஆஸ்திரேலியா வருமாறு இஸ்ரேல் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை அவர் ஏற்றிருந்தாலும், இதற்கு இடமளிக்க கூடாது என ஆஸ்திரேலியாவிலுள்ள பாலஸ்தீன ஆதரவாளர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் விடயத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட இராஜதந்திர மோதலால் தற்போது இரு தரப்பு உறவு பின்னடைவை சந்தித்துள்ளது எனக் கூறப்படுகின்றது.





