ஐரோப்பாவில் இருந்து பயணித்த வணிக கப்பல் மீது ஹுதிகள் தாக்குதல்!

யேமன் துறைமுக நகரமான மோகாவிற்கு மேற்கே 19 கடல் மைல் தொலைவில் செங்கடலில் வணிக்க கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரித்தானிய பாதுகாப்பு நிறுவனமான ஆம்ரே தெரிவித்துள்ளார்.
பல மாதங்களாக நாட்டின் கரையோரத்தில் உள்ள கப்பல்களைத் தாக்கிய யேமன் ஹூதி போராளிகளின் இலக்கு விவரத்திற்கு இந்தக் கப்பல் பொருந்துகிறது என்று அம்ப்ரே ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலானது ஐரோப்பாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு செல்லும் வழியில் தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் முதல் செங்கடல், பாப் அல்-மண்டப் ஜலசந்தி மற்றும் ஏடன் வளைகுடாவின் முக்கியமான கப்பல் தடங்களில் ஹூதிகள் பலமுறை ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 14 times, 1 visits today)