ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலால் உக்ரைனின் கார்கிவ் நகரில் வீடுகள் தீக்கிரை
இன்று அதிகாலை உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவ் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்தனர் மற்றும் மூன்று வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்ய எல்லையில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ், குறிப்பாக வான்வழித் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளது மற்றும் சமீபத்திய மாதங்களில் மாஸ்கோ தனது வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட்டதால் மோசமாக சேதமடைந்துள்ளது.
11 வயது குழந்தை உட்பட இரண்டு பேர் ஷெல் தாக்குதலில் காயமடைந்தனர் என்று ஆளுநர் ஓலே சினிஹுபோவ் தெரிவித்திட்டுள்ளார்.





