ஜப்பானில் பற்றி எரிந்த வீடுகள் – 170 பேர் வெளியேற்றம்!
ஜப்பானில் உள்ள ஓய்டா (Oita) நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியில் வசித்து வந்த 170 பேர் இன்று பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும், 70 வயதுடைய நபர் ஒருவரை காணவில்லை எனவும் ஜப்பானின் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்றின் காரணமாக தீ வேகமாக பரவியதாக கூறப்படுவதுடன், 20 மணிநேர போராட்டத்தை தொடர்ந்து தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





