போலி வைத்தியர்கள் குறித்து புகார் அளிக்க Hotline இலக்கம்

போலி வைத்தியர்கள் குறித்து தகவல் தெரிவிக்க Hotline இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சிலர் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான போதைப் பொருட்களையும் விற்பனை செய்வதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நபர்கள் தொடர்பில் 1907 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
40,000 போலி வைத்தியர்களில் மருத்துவம் பற்றிய அறிவு இல்லாதவர்களும் அதிகம் உள்ளதாக வைத்தியர் சமில் விஜேசிங்க மேலும் குறிப்பிட்டார்.
(Visited 27 times, 1 visits today)