டெங்கு தொடர்பான விசாரணைகளுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம் : சுகாதார அமைச்சு
டெங்கு தொற்றைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான விடயங்கள் தொடர்பில் மக்கள் தொடர்பு கொள்வதற்காக சுகாதார அமைச்சு தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சின் அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு பிரிவில் அமைக்கப்பட்டுள்ள 011-7966 366 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு இன்று (6) காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பொதுமக்கள் தொடர்பு கொள்ள முடியும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் பற்றி விசாரிக்கவும் அல்லது கொசு உற்பத்தியாகும் இடங்களை தெரிவிக்கவும்.இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹாட்லைன் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் உட்பட ஏழு நாட்களும் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)