கனடாவில் கடும் வெப்பம்! நெருக்கடியில் மக்கள்

கனடாவின் ரொரன்டோ மற்றும் ஹாமில்டன் ஆகிய பகுதிகளில் அதிகளவில் வெப்பநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், ஒட்டாவா மற்றும் ஒன்றாரியோ உள்ளிட்ட இடங்களிலும் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு கூடுதல் வெப்பநிலையை எதிர்பார்க்க முடியும் என கனடா சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலையானது 20 முதல் 35 பாகை செல்சியஸ் வரையில் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படும் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
(Visited 50 times, 1 visits today)