அமெரிக்காவில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் : அதிகரிக்கும் மரணங்கள்!
அமெரிக்காவில் காய்ச்சல் காரணமாக இதுவரை 09 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓஹியோ (Ohio) மற்றும் கென்டக்கி (Kentucky) மாநிலங்களில் முதல் குழந்தை இறப்புகள் பதிவாகியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கென்டக்கியில் (Kentucky) இறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு மாநிலங்களிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் காய்ச்சல் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இந்த பருவத்தில் நாடு முழுவதும் 7.5 மில்லியன் காய்ச்சல் தொற்றாளர்கள் 81,000 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர். அத்துடன் 3,100 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
டிசம்பர் 13 முதல் 20 வரை காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9,944 இலிருந்து 19,053 ஆக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நியூயார்க் (New York) மற்றும் கொலராடோவில் (Colorado) அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





