பிரித்தானியாவில் புற்றுநோயாளிக்கு 14 ஆண்டாகத் தவறான சிகிச்சையளித்த மருத்துவமனை

பிரித்தானியாவில் Coventry நகரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு 14 ஆண்டுகளாக தவறான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,மருத்துவமனை அந்த தவறை ஒப்புக்கொண்டது. அதேபோன்று மேலும் 12 பேருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தை அதிகபட்சமாக 6 மாதங்களுக்கு உட்கொள்ளலாம் என்று தேசிய சுகாதாரச் சேவையின் வழிகாட்டி சொல்கிறது.
அதற்கு மேல் தொடர்ந்து அந்த மருந்தை உட்கொண்ட அவருக்கு உடல்சோர்வு, வயிற்று வலி, வாய்ப்புண், தலைசுற்றல் ஆகியவை ஏற்பட்டன. அவருக்குச் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்பே அந்தத் தவறு வெளிச்சத்திற்கு வந்தது.