தைவானில் மருத்துமனையில் ஏற்பட்ட தீவிபத்து – 09 பேர் பலி!
தெற்கு தைவானில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பிங்டங் கவுண்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சூறை காற்றானது தீ வேகமாக பரவுவதற்கு வழிவகுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நோயாளிகளை வெளியேற்றுவதற்கும் தீயை அணைப்பதற்கும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவ அருகிலுள்ள தளத்திலிருந்து வீரர்கள் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.
தீவிபத்துக்கான காரணம் தொடர்பில் அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





