பிரித்தானியாவில் இரவு விடுதியில் நடந்த பயங்கரம் – உயிருக்கு போராடும் ஆண்!

பிரித்தானியாவின் பர்மிங்காமில் உள்ள மாங்கோ இரவு விடுதியில் இன்று (20.09) அதிகாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளதுடன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் ஆண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் குறைவான காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த சிறிது நேரத்திற்குப் பிறகு வார்விக்ஷயரில் உள்ள M6 இல் 20 மற்றும் 30 வயதுடைய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 6 times, 1 visits today)