பாகிஸ்தானில் இடம்பெற்ற கோர விபத்து – பரிதாபமாக உயிரிழந்த 12 பேர்

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மீது லொரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் ஐதராபாத்தில் ஒரு திருமண விழாவுக்காக வந்து திரும்ப செல்லும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக ஐதராபாத் துணை ஆணையர் அர்சலன் சலீம் தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்தவர்களில் 8 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. லொரி ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில் அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
(Visited 33 times, 1 visits today)