மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்து!!! ஐவர் பலி
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்கள் பயணித்த கார் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காரில் இருந்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த அனைவரும் 30 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் அரசு ஊழியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





