கனமழையால் செந்நிறமாக மாறிய ஹோர்மோஸ் தீவு

ஈரானின் ஹோர்மோஸ் தீவில் கடந்த நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வெள்ளப்பெருக்கில் பாய்ந்தோடும் நீர் செந்நிறமாக மாறியுள்ளதாகவும் ,இதனால் அப்பகுதியில் கடலும் செந்நிறமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹோர்மோஸ் தீவில் காணப்படும் மண்ணில் அதிக இரும்பு ஆக்சைட் இருப்பதால் இவ்வாறு வெள்ளநீர் செந்நிறமாக மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும்,செந்நிறமாக பாய்ந்தோடும் வெள்ளத்தை பார்வையிடுவதற்கு அதிகமானவர்கள் வருகை அப்பகுதிக்கு தருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 1 times, 1 visits today)