சீனாவிடம் இருந்து தைவானை அமெரிக்கா காப்பாற்றும் என நம்பிக்கை
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், சீன ஆக்கிரமிப்பிலிருந்து தனது நாட்டைப் பாதுகாக்கும் உறுதியுடன் தொடருவார் என்று தைவான் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்ற தனது பிரச்சார வாக்குறுதிகளை டிரம்ப் பின்பற்றுவார் என்று எதிர்பார்ப்பதாக தைவான் அரசாங்கம் கூறுகிறது.
தைவான் ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கரேன் குவோ, தைவான்-அமெரிக்க உறவுகளின் புதிய நிலையை உருவாக்க புதிய அமெரிக்க நிர்வாகம் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.
ரேடியோ ப்ரீ ஏசியாவின் அறிக்கையின்படி, தைவான் மக்கள் டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றியை “தீவின் வெற்றி” என்று அறிவித்துள்ளனர்.
தைவானை சீனா இணைக்கும் போது டிரம்ப் அமைதியாக காத்திருக்க மாட்டார் என தைவான் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.