காதலுக்கு போர்க்கொடி: துணி வியாபாரி ஆணவக்கொலை! ஆந்திராவில் பயங்கரம்!!
காதல் திருமணம் செய்த துணி வியாபாரி கொடூரமாக ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்தியா, ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேக நபர்களை மக்கள் நையப்புடைத்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் அம்பேத்கார் கோனசீமா மாவட்டம் வேம்பள்ளியை சேர்ந்தவரான 41 வயதான சூரிய பிர காஷ் துணி வியாபாரம் செய்பவர்.
மேடபாடு கிராமத்தைச் சேர்ந்த சந்தியா, ராயவரத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார்.
இருவரும் ஒரே பாடசாலையில் பயின்றுள்ளனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு சந்தியா குடும்பத்தினர் உடன்படவில்லை.
இந்நிலையில் இருவரும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தனர். இந்த திருமணத்தில் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதனை அறிந்த சந்தியாவின் சகோதரர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
திருமணம் முடிந்ததும் சந்தியாவை அழைத்துக்கொண்டு சூரியபிரகாஷ் வேம்பள்ளியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.
இதனை அறிந்த சந்தியாவின் சகோதரர்கள் நள்ளிரவு சூரியபிரகாஷ் வீட்டுக்குச் சென்று அவரை தாக்கினார்கள்.
பின்னர் இருவரும் சேர்ந்து பாறாங்கல்லை தூக்கி சூரியபிரகாசின் தலையில் போட்டனர். இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி அறிந்ததும் பொதுமக்கள் திரண்டுவந்து, சந்தியாவின் சகோதரர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.





