மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை – ஸ்கொட்லாந்தில் அறிமுகம்
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ள புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்க ஸ்கொட்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தத் திட்டம் குழந்தைகள் வீட்டிலேயே ஒளிக்கதிர் சிகிச்சையைப் பெற அனுமதிப்பதுடன், இடையூறு விளைவிக்கும் மருத்துவமனை மறுசேர்க்கைகளைத் தடுப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறு வீடுகளில் சிகிச்சையளிக்கும்போது பெற்றோர்களுக்கு மன அழுத்தம் குறைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிததாக பிறக்கும் 10 குழந்தைகளில் 06 குழந்தைகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த சேவையால் இதுவரை 40 குழந்தைகள் பயனடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





