காசா மீது தொடரும் தொடர் தாக்குதல் – ஹாலிவுட் நட்சத்திரங்கள் வெளியிட்ட கடிதம்
காசா மீதான தாக்குதலை கண்டிப்பதாக கூறி ஹாலிவுட் நட்சத்திரங்களான ரிச்சர்ட் கியர் மற்றும் சூசன் சரண்டன் உட்பட 350-க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் ஒரு திறந்த கடிதம் வெளியிட்டனர்.
பிரான்ஸில் கான்ஸ் திரைப்பட விழா தொடங்குவதற்கு முன்னதாக கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
காசாவில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும்போது அமைதியாக இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.
காசாவை சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹஸ்ஸோனா தொடர்பான ஆவணப்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்படுகிறது.
ஹஸ்ஸோனா மற்றும் அவரது 10 உறவினர்கள் கடந்த மாதம் வடக்கு காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.





