இலங்கையில் வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை!
மகா சிவராத்திரியை முன்னிட்டு வியாழக்கிழமை (27) வட மாகாணத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்படும் என்று வட மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.
குறித்த விடுமுறைக்கு பதிலாக மார்ச் 1 ஆம் திகதி சனிக்கிழமை பள்ளிகள் நடைபெறும் என்று வேதநாயகன் அறிவித்துள்ளார்.
மகா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், அன்றைய தினம் பக்தர்கள் சிவ ஆலயங்களில் கண்விழித்து பிராத்தனைகளில் ஈடுபவர். இதனை முன்னிட்டே விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 43 times, 1 visits today)





