விடுமுறை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து – பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

பிரான்ஸில் விடுமுறை விடுதியொன்றில் ஏற்பட்ட பாரிய தீயினால் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என அஞ்சப்படுகிறது.
ஜேர்மன் எல்லையிலிருந்து 70 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வின்ட்ஸென்ஹெய்ம் நகரில் இன்று (9) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த விடுதிப் பகுதியே தீப்பற்றியுள்ளது.சம்பவத்தில் 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் காணாமல் போனவர்களும் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தீ தற்போது அணைக்கப்பட்டு விட்ட நிலையில் தீ பரவியமைக்கான காரணம் வெளியாகவில்லை.
(Visited 17 times, 1 visits today)