லெபனானை போருக்கு தூண்டும் ஹிஸ்புல்லா அமைப்பு : இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட தகவல்!
இஸ்ரேல் மீதான ஹிஸ்பொல்லாவின் தாக்குதல்கள் லெபனானை போருக்கு இழுக்கும் அபாயம் உள்ளதாக இஸ்ரேல் இராணுவம் இன்று (22.10) அறிவித்துள்ளது.
எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு பரிமாற்றங்களுக்குப் பிறகு, இது ஒரு பரந்த மோதலுக்கான அச்சத்தை எழுப்பியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்பொல்லா ஹமாஸுடன் இணைந்துள்ளது, ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல்களை ஆரம்பித்த நாள் முதல் ஹெஸ்பொல்லா அமைப்பும் வன்முறையில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தெற்கில் ஹமாஸுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் மற்றொரு போர்முனையைத் திறக்க ஹெஸ்பொல்லா உத்தேசித்துள்ளதாக கவலைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையிலேயே இஸ்ரேல் இராணுவம் மேற்படி தெரிவித்துள்ளது. “ஹிஸ்புல்லா மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறது என்றும் அவர்கள் நிலைமையை அதிகரிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அதிகமான தாக்குதல்களை நாங்கள் காண்கிறோம்” என்றும் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.