இலங்கையில் தீவிரமடையும் HIV தொற்று – வெளிவரும் அதிர்ச்சி புள்ளிவிபரம்

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் எச்.ஐ.வி தொற்று 13 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனை தெரிவித்தார்.
இந்நிலைமை நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதால் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் நாடாளுமன்றில் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
(Visited 19 times, 1 visits today)