இலங்கை

ஹித்தேகம கொலை சம்பவம் ; தந்தையை கொல்ல தாய்க்கு உதவிய மகன்!

நாட்டையே உலுக்கிய ஹிதோகம கொலைக்கான அடிப்படைக் காரணத்தை பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளனர்.குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் ஹிதோகம திவுல் ஏரியில் நேற்று (09) சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதுடன், அது முற்றாக பல துணிகளில் சுற்றப்பட்டு கிரானைட் கல்லில் கட்டி ஏரியில் விடப்பட்ட நிலையில் காணப்பட்டது.அதன்படி, பொலிஸாரால் மேற்கொண்ட தேடுதலின் போது, ​​உயிரிழந்தவர் தங்கஹகடவல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் பிரேத பரிசோதனையில் அவர் கூரிய ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், கொலை செய்யப்பட்ட நபரின் 39 வயது மனைவி மற்றும் 24 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையின் பின்னர் சடலத்தை ஏரிக்கு எடுத்துச் சென்ற முச்சக்கர வண்டியையும் பொலிஸார் வீட்டில் இருந்து மீட்டுள்ளனர்.சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​கடந்த 8 ஆம் திகதி காலை 9 மணி அளவில் தாய் தந்தைக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில், மகனும் தலையிட்டதில், குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அன்றைய தினம் மாலை ஏரிக்கு சடலம் கொண்டு வரப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிதோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content