உலகம் ஐரோப்பா

வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு: அமெரிக்காவுக்கான மறைமுக எச்சரிக்கையா?

சீன ஜனாதிபதி Xi Jinping மற்றும் பிரிட்டன் பிரதமர் Keir Starmer ஆகியோருக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் பார்வை திரும்பியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போரால், நட்பு நாடுகள்கூட கடும் தாக்கத்தை எதிர்கொண்டுவருகின்றன.

ஏற்றுமதி பொருளாதாரதில் அமெரிக்காவை மற்றும் சார்ந்திருக்காது, ஏனைய பலம் பொருந்திய நாடுகளில் தமக்குரிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுவருகின்றது.

கனடா, ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் சீனாவின் பொருளாதாரம்மீது தமது பார்வையை செலுத்திய நிலையில், பிரிட்டனும் புதிய அணுகுமுறையைக் கையாள முன்வந்துள்ளது.

இதற்கமைய பிரிட்டன் பிரதமர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு, முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்திவருகின்றார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை மீண்டும் வலுப்படுத்துவதை இச்சந்திப்பு நோக்காக கொண்டிருந்தாலும், அமெரிக்காவுக்கான மறைமுக எச்சரிக்கை எனவும் கூறப்படுகின்றது.

பல ஆண்டுகளாக நிலவி வந்த ராஜதந்திர மோதல்களைக் கடந்து, வணிகம், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த புதியதொரு முன்னேற்றமான பாதையை உருவாக்க இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் எதிர்கொண்டுள்ள பொருளாதார சவாலை சமாளிக்க உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியுடன் உறவு அவசியம் என்பதை உணர்ந்து, பிரதமர் ஸ்டார்மர் இந்த முக்கியமான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகள் ஒருபுறம் இருந்தாலும், பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் உறவைச் சீரமைக்க லேபர் கட்சி முன்னுரிமை அளிக்கிறது.

இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளைக் களைந்து, மூலோபாயக் கூட்டுறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த சந்திப்பு ஒரு முக்கியத் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

இவ்வாறு, உலகளாவிய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் பிரிட்டன் தனது சர்வதேச வெளியுறவுக் கொள்கையை மறுசீரமைப்பு செய்து வருவதை பிரதமரின் பிரிட்டன் பயணம் வெளிப்படுத்துகின்றது.

Dila

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!