வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றுச் சாதனை – ஜனாதிபதியின் செலவுகள் குறித்த குற்றச்சாட்டு
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதியின் செலவினத்திற்காக அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் முதல் அமர்வில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த ஆண்டு பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை டிசம்பர் 15ஆம் திகதிக்குள் முடிக்க வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் அதை அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
முன்னதாக, ஜனவரி 29ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், தொடர்புடைய நடவடிக்கைகள் நேற்றைய திகதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





