அமெரிக்காவுக்கான தமது இலக்குகள் – பரபரப்பு விவாதத்தில் இறுதிக் கருத்துகள்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும் முன்னாள் ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்பும் நேரடி விவாதத்தில் இறுதிக் கருத்துகளை முன்வைத்தனர்.
ஹாரிஸ், அமெரிக்காவுக்கான தமது இலக்குகளுக்கும் ட்ரம்ப்பின் இலக்குகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்பு கூறியது போல் தாம் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவதாகவும் ட்ரம்ப் இறந்த காலத்தில் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.
திருவாட்டி ஹாரிஸ் தாம் கவனம் செலுத்தவிருக்கும் கொள்கைகளைப் பற்றியும் பேசினார்.
கருக்கலைப்பு உரிமை அவற்றுள் ஒன்றாகும். ஹாரிஸின் கொள்கைளில் ஒன்றுமில்லை என்று ட்ரம்ப் அவருடைய விவாதத்தின் முடிவில் குறிப்பிட்டார்.
ஹாரிஸ் கிட்டத்தட்ட நான்கு ஆண்டாகப் பதவியில் இருந்தும் கொள்கைகள் அனைத்தையும் நிறைவேற்றவில்லை என்று அவர் கூறினார்.
தவறான தொலைநோக்குப் பார்வை காரணமாக நாட்டைத் தியாகம் செய்யமுடியாது என்றார் அவர்.
“நம்முடைய தேசம் வலுவிழந்து வருகிறது. ஹாரிஸ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மூன்றாம் உலகப் போர் நடக்க வாய்ப்புள்ளது,” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.