பிள்ளையானுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் இன்று (09) இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இம்மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்து தடுப்புக்காவலில் வைப்பது சட்டவிரோதமானது எனவும், இதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




