செய்தி

இலங்கையர்களுக்கு அமைதியான மரணத்தை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தம்

நாட்டில் உள்ள முதியவர்களில் நான்கில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போது உயர் இரத்த அழுத்தத்தினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசிய நாடுகளில் நடுத்தர வயதுடையவர்களுக்கே இந்த நிலை அதிகமாக காணப்படுவதாகவும், கொவிட் அனர்த்த காலத்திலிருந்து இலங்கையில் நிலவும் பொருளாதார மந்தநிலை போன்ற சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளும் இந்நிலைமை அதிகரிப்பதற்கு காரணமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. .

உயர் இரத்த அழுத்தம் எந்த அறிகுறிகளையும் காட்டாததால், அது ஒரு நபருக்கு அமைதியான மரணத்தை அளிக்கிறது என்று பேராசிரியர் கூறினார்.

இந்த நிலை மோசமடையும் போது மிகவும் அரிதாக கடுமையான தலைவலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம் எனவும் உதய ரலபனாவ குறிப்பிட்டுள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி