லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த ராணுவத் தலைவர் மரணம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பு அதன் மூத்த ராணுவத் தலைவர் இப்ராஹிம் அக்கில் கொல்லப்பட்டதை உறுதி செய்தது.
இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 66 பேர் காயமுற்றனர் என்று லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் 9 பேர் மோசமான நிலையில் உள்ளனர்.
இஸ்ரேலின் இலக்குகள் தெளிவானவை என்று பிரதமர் Benjamin Netanyahu ஊடகத்திடம் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் லெபனானைக் குறிவைத்து தாக்கிவருகிறது. இது மூன்றாவது தாக்குதலாகும்.
அதன் கவனம் காஸாவிலிருந்து திசை திரும்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.
(Visited 3 times, 1 visits today)