நீதி நடவடிக்கைகளில் கைப்பற்றபட்ட போதைப் பொருட்கள் அழிக்கப்படும்

நீதி நடவடிக்கையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் அதற்கான விசேட இடம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
(Visited 14 times, 1 visits today)