ஜப்பானில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் – மூவர் பலி!
தென்மேற்கு ஜப்பானில் ஒரு மருத்துவ போக்குவரத்து ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் நோயாளி உள்பட மேலும் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விமானி ஹிரோஷி ஹமாடா (66), ஹெலிகாப்டர் மெக்கானிக் கசுடோ யோஷிடகே (Kazuto Yoshitake) மற்றும் 28 வயது செவிலியர் சகுரா குனிடகே (Sakura Kunitake) ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் உடல்கள் ஜப்பான் விமான சுய பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டன.
மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடலோர காவல்படை இரண்டு விமானங்களையும் மூன்று கப்பல்களையும் அந்தப் பகுதிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணங்களை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)





