ஜப்பானில் கடுமையான பனிப்பொழிவு – பொது மக்களுக்கு எச்சரிக்கை
ஜப்பானில் கடலை ஒட்டிய மலைப்பகுதிகளில் ஏற்படும் கடும் பனிப்பொழிவால் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று காலை நிலவரப்படி Aomori மாநிலத்தில் உள்ள Hakkoda மலைப்பகுதியில் 390 செண்டிமீட்டருக்கும் அதிகமாகப் பனி படிந்தது.
ஆண்டுதோறும் இந்தக் காலக்கட்டத்தில் வழக்கமாகப் பெய்யும் பனியைவிட அது ஒரு மடங்கு அதிகம். Niigata மாநிலத்தின் Itoigawa நகரிலும் வழக்கத்தைவிட அதிக அளவில் பனி கொட்டியது.
மலைப்பகுதிகளில் பனிச்சரிவை எதிர்கொள்ள மக்கள் ஆயத்தமாக இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்தனர்.
மின் கம்பங்கள், மரங்கள் ஆகியவற்றில் அளவுக்கு அதிகமாகக் குவியும் பனியால் மின்சார விநியோகம் துண்டிக்கப்படக்கூடும் என்று அவர்கள் கூறினர்.
Hokkaido, Tohoku ஆகிய வட்டாரங்களில் இன்று வரை கடுங்குளிர் நீடிக்கும் என்று ஜப்பானின் வானிலை ஆய்வகம் எச்சரித்தது.