நியூயார்க்கில் காட்டுத்தீயினால் கடும் புகை – அவசர நிலை பிரகடனம்

நியூயார்க்கில் காட்டுத்தீ பரவியதைத் தொடர்ந்து அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நியூயார்க்கின் வெஸ்ட்ஹாம்ப்டன் (WESTHAMPTON) பகுதியில் அடுத்தடுத்து 4 இடங்களில் காட்டுத்தீ பரவியமை தொடர்ந்து வானில் கரும்புகை சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், காட்டுத்தீ பரவக்கூடிய ஆபத்து உள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
சமீபத்தில் தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 29 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 1 visits today)