மியன்மாரில் கனமழை : 10 ஆயிரம் பேர் இடம்பெயர்வு!

மியான்மரின் தெற்குப் பகுதிகளில் பெய்த கனமழையால் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஏறக்குறை 10 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
அத்துடன் நாட்டின் மிகப் பெரிய ரயில் போக்குவரத்து தடை பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நலன், நிவாரணம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சகத்தின் மூத்த அதிகாரி லே ஷ்வே ஜின் ஓ, பாகோ பகுதியில் கடந்த வாரம் தொடங்கிய தொடர் மழையால் அதன் தலைநகரான பாகோ டவுன்ஷிப்பின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதாகவும், இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்றும் கூறினார்.
மியன்மாரில் கடந்த 59 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(Visited 11 times, 1 visits today)