இலங்கையில் இன்றும் பலத்த மழை – பொது மக்களுக்கு எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இடி மின்னலின் போது தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.