ஸ்பெயினில் ஒரே இரவில் பெய்த கனமழை – வீதிகளில் வெள்ளப்பெருக்கு
ஸ்பெயினில் ஒரே இரவில் பெய்த கன மழையின் காரணமாக மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
அங்குள்ள வீதிகளிலும் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஸ்பெயினின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள அல்கானார் மற்றும் டாரகோனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
இதனிடையே பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஸ்பெயினின் தேசிய வானிலை மையம் கேட்டலோனியா உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.





