வடக்கு சீனாவில் கனமழை : எட்டுபேர் மாயமானதாக தகவல்!
வடக்கு சீனாவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைநகர் பெய்ஜிங்கின் எல்லையான ஹெபே மாகாணத்தில் உள்ள லுவான்பிங் கவுண்டியின் கிராமப்புறப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி எட்டு பேர் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்ளூர்வாசி ஒருவர் அரசு ஆதரவு பெற்ற பெய்ஜிங் செய்தி நிறுவனத்திடம், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், தனது உறவினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.
கனமழை காரணமாக ஜூலை 25 அன்று ஹெபே அதிகாரிகள் வெள்ள எச்சரிக்கைகளை விடுத்தனர். பெய்ஜிங் மற்றும் அண்டை நகரமான தியான்ஜின் திங்களன்று தங்கள் சொந்த எச்சரிக்கைகளைத் தொடர்ந்தன.
மேலும் 4,015 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





