ஜெர்மனியில் கடும் மழை!! 90 விமானங்கள் ரத்து
ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது, மரங்கள் முறிந்து விழுந்து வீதிகள் தடைப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கனமழையுடன் சூறாவளியும் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, நாட்டின் அதிகாரிகள் மிகவும் பரபரப்பான மற்றும் முக்கிய ஐரோப்பிய மையமான பிராங்பேர்ட் விமான நிலையத்தில் பல விமானங்களை ரத்து செய்ய வேண்டியுள்ளது.
இதனால், ஏராளமான பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
இன்று மட்டும் 90 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது மேலும் 23 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
350க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்குள் தண்ணீர் புகுந்தது மற்றும் 17 மரங்கள் விழுந்து நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
(Visited 8 times, 1 visits today)