கலிஃபோர்னியாவில் காட்டுத்தீயை தொடர்ந்து பெய்யும் கனமழை : சேற்றில் புதைந்த சாலைகள்!

தெற்கு கலிஃபோர்னியாவில் நிலவிய காட்டுத்தீயை தொடர்ந்து தற்போது கனமழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்திய காட்டுத்தீயால் தரிசாக விடப்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகிறது.
பசிபிக் பாலிசேட்ஸில், நெடுஞ்சாலையின் ஒரு சந்திப்பு குறைந்தது மூன்று அடி சேற்றில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பாதைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவற்றை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.
இதேவேளை வடக்கே, ஓரிகான் மற்றும் வாஷிங்டனில் உள்ள நெடுஞ்சாலைகளில் பனி மற்றும் பனிக்கட்டிகள் நிரம்பி வழிவதாகவும், குளிர்கால புயல் வீசியதால் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)