ஐரோப்பா

பிரித்தானியாவில் கொட்டித் தீர்க்கும் மழை மற்றும் வெள்ளம்!! மக்களின் கவனத்திற்கு!

புயல் சந்திராவால் ஏற்பட்ட சமீபத்திய வெள்ளத்தைத் தொடர்ந்து, தென்மேற்கு இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகளில் பனி மற்றும் மழை பெய்யும் என வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே நாளைய தினம் பனிக்கான மஞ்சள் எச்சரிக்கை அமலில் உள்ளது. வெப்பநிலை இரவு முழுவதும் பூஜ்ஜியத்திற்கு கீழே குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த மஞ்சள் எச்சரிக்கை வரும் செவ்வாய்க்கிழமை வரை அமுலில் இருக்கும் எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

முன்னறிவிப்பாளர்களின் கணிப்புப்படி , டார்ட்மூரில் (Dartmoor) 30-50 மிமீ மற்றும் டெவோன் (Devon), கார்ன்வால் (Cornwall), டோர்செட் (Dorset) மற்றும் சோமர்செட் (Somerset) முழுவதும் 10-20 மிமீ பரவலாக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் வீடுகள் மற்றும் வணிகங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது எனவும் உயிராபத்துக்கள் தொடர்பில் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!