ஐரோப்பா

வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் ஹீத்ரோ தொழிலாளர்கள்!

ஹீத்ரோ தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர உடன்பாடு எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹீத்ரோவில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள், அரசாங்கத்துடன் ஒரு புதிய ஊதிய ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகு, வேலைநிறுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கம் கூறியுள்ளது.

இதன்படி தொழிலாளர்கள் 15.5% முதல் 17.5% வரை ஊதிய அதிகரிப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், கோடை காலப்பகுதியில், திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தத்தை கைவிடுவதாக அறவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  யுனைட் பொதுச் செயலாளர் ஷரோன் கிரஹாம்,  “இது கடினமான வெற்றியாகும், இது தொழிலாளர்கள் ஒன்றிணைந்து செயல்படும்போது என்ன சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!